BOX OFFICE: புஷ்பா படத்தின் அள்ள அள்ள குறையாத வசூல்! 50 வது நாளில் செய்த மகத்தான சாதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

HYDRABAD: 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடி புஷ்பா படம் சாதனை படைத்துள்ளது.

Advertising
>
Advertising

பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' கடந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு   டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது.  மேலும் சிலநாட்களுக்கு முன் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது. ஹிந்தியில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 100 கோடி ரூபாயை வசூல் செய்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி உள்ளது.

ஜனவரி 7 ஆம் தேதி முதல் புஷ்பா திரைப்படம் பிரபல அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி பிரிண்டுகள் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

அமேசான் பிரைமில் வெளியான பின்னும் இந்த படம் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. இன்றுடன் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ளது புஷ்பா திரைப்படம். மேலும் உலகம் முழுவதும் 50 நாட்களில் இந்த படம் 375 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளனர்.

உடல் அரசியலுக்கு ஆதரவாக களமிறங்கிய இலியனா! எடிட் செய்யாத ஒரிஜினல் PHOTO-வை வெளியிட்டு பரபரப்பு

முதல்முறையாக தியேட்டரில் வெளியான சூரரைப் போற்று! திருவிழா கொண்டாட்டமாக்கிய ரசிகர்கள்

 

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Pushpa Movie 50 days Box office collection report

People looking for online information on 50 days Box office, Allu Arjun, அல்லு அர்ஜுன், புஷ்பா, ராஷ்மிகா மந்தனா, Pushpa movie will find this news story useful.