தெலுங்கு ரசிகர்களால் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் அல்லு அர்ஜுன். இவரது நடனத்துக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தன் பள்ளிப்பருவத்தை சென்னையில் கழித்தவர். நடிப்பது தெலுங்கில் என்றாலும் தமிழ் பேசும்போது பக்கா சென்னை வாசி. சமீபத்தில் அவர் நடித்த ’அலாவைகுந்தபுரமுலோ’ படம் தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்றது.
