துபாயில் புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன்.. UAE அரசு அளித்த மிகப்பெரிய கௌரவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

Advertising
>
Advertising

Also Read | எங்கே செல்லும் இந்த பாதை.. நினைவிழந்த நிலையில் பாரதி.. பாரதி கண்ணம்மா சீரியல் ட்விஸ்ட்!

சமீபத்தில் பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம் உலகம் முழுவதும்  300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை  வெளியிட்டு இருந்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

மேலும் இந்த படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது.  நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், போஸ்டர் வடிவமைப்பாளர் டியூனி ஜான், போட்டோகிராபர் அவினாஷ் கவுரிகர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தற்போது புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், துபாய்க்கு சென்றுள்ளார். மேலும் துபாய் அரசு அல்லு அர்ஜூனை கௌரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கி உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்லு அர்ஜூன் பகிர்ந்துள்ளார்.

குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களை கௌரவிக்கும் வகையில்  ஐக்கிய அமீரக அரசால்  கொண்டுவரப்பட்டது தான் கோல்டன் விசா.

இந்தியாவின் முக்கியமான விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகள் பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகின்றன. பத்து வருடங்கள் வரை ஐக்கிய அமீரகத்தில் தங்கும் வசதி கொண்ட சிறப்புமிக்க விசா தான் இந்த கோல்டன் விசா.

இதை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களும் அமீரக நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள். இந்த கோல்டன் விசாவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது.

Also Read | ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்.. திரண்டு வந்த ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகம்.. வைரல் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Honoured with Dubai Government Golden Visa

People looking for online information on Allu Arjun, Dubai government, Golden Visa will find this news story useful.