நடன இயக்குநரின் திருமணத்தில் அல்லு அர்ஜூன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலும் பிரபலமானவர் அல்லு அர்ஜூன் . இவரது படங்களான 'ஆர்யா', 'ஆர்யா 2' , 'ஜூலாய்', 'வேதம்' ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றவை.

திரைப்பட பாடல்காட்சிகளில் இவரது நடனம் மிகுந்த பிரபலம். எவ்வளவு கடினமான ஸ்டெப்ஸ் என்றாலும் இவர் வெகு சுலபமாக ஆடுவதில் வல்லவர். அதற்கென தனிப் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் அல்லு அர்ஜூன் துணை நடன அணைப்பாளர் சிரிஸ் என்பவரின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

நடன இயக்குநர் சிரிஸ், அல்லு அர்ஜூனின் பட நிறுவனமான கீதா ஆர்ட்ஸில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்துள்ளார். நடனம் மீதான அவருக்கு இருந்த காதலை புரிந்து கொண்ட அல்லு அர்ஜூன், அவரை நடனம் கற்பித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கு திரைப்படங்களில் துணை நடன இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

Allu Arjun attends Assistant Choreographer Shirish marriage

People looking for online information on Allu Arjun, Shirish, Tollywood will find this news story useful.