KGF 2: ”இப்படி ஒரு படமா… இந்திய சினிமாவ வேற…” புஷ்பா ஹீரோ போட்ட வைரல் TWEET!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Kgf 2 படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Advertising
>
Advertising

Also Read |  தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தில் இணைந்த பிரபல 'அசுரன்' பட நடிகர்.. வேறமாரி BTS புகைப்படம்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கேஜிஎஃப் 2….

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎஃப் 2, திரைப்படத்தை தமிழில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். கேஜிஎஃப் 2 திரைப்படம் 10,000 திரையரங்குகளில் வெளியானது. தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) முதல் நாளில் ரிலீஸானது. ஆனால் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளியானது முதல் உலகம் எங்கும் அமோகமான வரவேற்பை கேஜிஎஃப் 2 பெற்றுவருகிறது.

வெற்றிகரமான இரண்டாவது வாரம்…

கேஜிஎஃப் 2 வெளியானது முதல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் 240 கோடி ரூபாயை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் சிறப்பான வசூலை செய்து வருகிறது. பல புறநகர்ப் பகுதிகளில் படத்துக்குக் கூட்டம் அதிகமாக வருவதாக கூடுதலாக நாற்காலிகள் போட்டு காட்சிகள் திரையிடப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே நள்ளிரவு காட்சிகள் மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட்டு வருகின்றன. மொத்தம் நான்கு நாட்களில் உலகளவில் 540 கோடி ரூபாயை இந்த படம் மொத்தமாக வசூல் செய்துள்ளது. இந்த வசூல் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் சாதனையாகப் பாரக்கப்படுகிறது. உலகளவிலும் கேஜிஎஃப் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

ராக்கி பாயை பாராட்டிய புஷ்பராஜ்…

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள சமீபத்தில் புஷ்பா என்ற மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவரது டிவீட்டில் “என்ன மாதிரியான ஒரு படத்தைக் கொடுத்துள்ளீர்கள்.பிரசாந்த் நீல்,  உங்களுக்கு என் மரியாதை. இப்படி ஒரு சினிமாட்டிக் அனுபவத்தைக் கொடுத்ததற்கும், இந்திய சினிமாவின் கொடியை உயரப் பறக்க வைத்ததற்கும் நன்றி” எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தில் நடித்த யாஷ், மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோரின் நடிப்பையும் வெகுவாக சிலாகித்துள்ளார். அவரின் ட்வீட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

KGF 2: ”இப்படி ஒரு படமா… இந்திய சினிமாவ வேற…” புஷ்பா ஹீரோ போட்ட வைரல் TWEET! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Allu arjun applauded kgf 2 movie crew

People looking for online information on Allu Arjun, KGF Chapter 2 Movie, KGF2, Prashanth Neel, Yash will find this news story useful.