தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன். கடந்த டிசம்பர் 17ம் தேதி இவரது நடிப்பில் வெளியான 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகி ரூ.300 கோடி வசூல் புரிந்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புஷ்பா தி ரைஸ் இந்தியில் பான் இந்தியாவாக வெளியாகி வட இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், வசனங்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டடித்தது. பல சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இந்த வீடியோ பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு புஷ்பா படத்தின் பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு ஆண்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலரும் ஆட்டம்போட்டி கொண்டாடினர்.
புஷ்பா: தி ரைஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை 2022 டிசம்பரில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தினேஷ் கார்த்திக் உடன் ஜான்வி கபூர்.. இது வேற லெவல் ஆச்சே! பிரமிப்பில் ரசிகர்கள்!
இப்படத்தினை தொடர்ந்து அல்லு அர்ஜுன் கொரடலா சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு தற்காலிகமாக AA21 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
'கடவுள் என் ப்ரா சைஸை அளவிடுகிறார்'.. விவகார பேச்சால் சிக்கலில் பிரபல BIGGBOSS நடிகை!
இந்நிலையில், புஷ்பா: தி ரைஸ் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ள நிலையில், துபாய் சென்றுள்ள அல்லு அர்ஜூன் சமீபத்திய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நகரத்தின் உயரமான இடத்தில் இருந்து பால்ம் ஜுமேரா தீவை ரசிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கடலில் மண்ணை கொட்டி செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள பாம் ஜூமேரா தீவு வானளவில் பிரமிக்க வைக்கிறது என்று குறிப்பிட்டு, கருப்பு இதய எமோஜியை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் 16 லட்சத்து 97 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.