தமிழில் 'குறும்பு', 'போராளி' படங்களின் மூலம் தமிழிலும் அறியப்படுப்பவர் அல்லரி நரேஷ். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'அல்லரி' என்கிற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானவருக்கு அந்த படம் அவருக்கு அடையாளமாகவே மாறிப்போனது.
தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் ரீமேக்கான 'ஜூனியர்' படத்திலும், 'காதல் கொண்டேன்' படத்தின் ரீமேக்கான 'நேனு' படத்திலும் நடித்துள்ளார்.
இதனையடுத்து தற்போது திரையுலகில் அறிமுகமாகி 17 வருடங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தல் வெளியிட்டுள்ளார். அதில், ''17 வருடங்களுக்கு முன் ஒரு இளைஞன் வெற்றிக்கான வழியைத் தேடி முயற்சித்துக்கொண்டிருந்தான். அந்த இளைஞன் மே 10, 2002 ஆம் ஆண்டு 'அல்லரி' நரேஷாக புதிதாக பிறந்தான். அந்த படம் எனக்கு அங்கீகாரத்தை வழங்கியது.
அல்லரி படத்தில் ரவி என்கிற கேரக்டரில் தொடகங்கி தற்போது 'மஹர்ஷி'யில் உள்ள ரவி வரை 55 படங்களில் மறக்க முடியாத அனுபங்கள். என்னுடைய எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.