BiggBossTamil: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Cooku with Comali
ஏற்கனவே இந்த நிகழ்ச்சி 2 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. எண்டர்டெயிண்ட்மெண்ட்டுடன் கூடிய இந்த வித்தியாசமான சமையல் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில், சமைப்பதற்கு குக்குகள், எண்டர்டெயின்மெண்ட்டுக்கு கோமாளிகள் என ஜனரஞ்சகமான ஒரு புதிய ஐடியா ஏறக்குறைய அனைவரையுமே கவர்ந்தது.
Cook with Comali Season 3
தற்போது இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் வந்துள்ளது. இதில் புத்தம் புது போட்டியாளர்கள் சமைப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஜனவரி 23-ஆம் தேதி அன்று, பாரதி கண்ணம்மா பிரபல நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், நடிகர் மனோபாலா, நடிகை வித்யூலேகா, பாடகர் ஆண்டனி தாசன் உள்ளிட்டோர் குக்குகளாக அறிமுகமாயினர்.
கோமாளிகள்
ஏற்கனவே கோமாளிகளாக சிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, குரேஷி, மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் பரத் மற்றும் ஷீத்தா கிளாரின் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் குக்குகளின் வருகைக்காக ஏற்கனவே செட்டில் காத்திருந்தனர்.
"ராஜூ என்னை Hate பண்றாரா?".. BiggBoss ரசிகரின் கேள்விக்கு பாவனி பதில்! வீடியோ
நடிகை ஷ்ருதிகா
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் வருகை தந்தார் நடிகை ஷ்ருதிகா. எண்ட்ரி கொடுத்ததில் இருந்தே சிரித்த முகமாக இருந்த ஷ்ருதிகா, அங்கிருந்த கோமாளிகள் தன்னை வர்ணிப்பதை கேட்டு நன்றி சொல்லி, சிரித்துக்கொண்டே இருந்தார். கோமாளிகளின் வர்ணனைகளை அங்கீகரிக்கும் விதமாக, ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு’ பாடலையும் ஷ்ருதிகா, பாட்டாவே பாடி நன்றி சொல்லிவிட்டார். எனினும் ஓரளவுக்குத்தான் பாடுவேன், அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க என்கிற டிஸ்க்ளைமைரையும் போட்டுவிட்டு பாடினார்.
நடிச்ச 4 படமும் Flopங்க
தொடர்ந்து பேசியவர், “நான் 10 வருசத்துக்கு முன்னால 4 படம் நடிச்சேன். ஆனா நடிச்ச 4 படமும் ஃப்ளாப்பு” என சொல்ல, அங்கிருந்த பாலா, சிவாங்கி, மணிமேகலை அனைவருமே ஆஹா யாருப்பா இவங்க.., இவ்ளோ பரந்த மனசோட பேசுறாங்களே என நெகிழ்ந்துவிட்டனர். அதிலும் நம்ம KPY பாலா ஷ்ருதிகாவின் காலிலேயே விழுந்துவிட்டார்.
ஒரே நாள்ல fans-ஐ அள்ளினார்
திரை முன்பாக எவ்வித ஒளிவுமறைவும் பகட்டும் இல்லாமல் இயல்பான மனதுடன், தனக்கு தோன்றியதை பேசி சிரிக்கும் ஷ்ருதிகாவை பலருக்கும் பிடித்துவிட்டது. இன்னும் சிலர் இந்த அளவுக்கு உண்மைய சொல்றாங்களே.. இவங்க இவ்ளோ நாள் எங்கப்பா இருந்தாங்க என கூறி பாராட்டி வருகின்றனர்.
தளபதி விஜய்.. நண்பனுக்காக Bigg Boss பார்த்து.. "வெளில வந்தாப்றம் என்ன சொன்னாரு? Exclusive
பிரபல நடிகரின் பேத்தி!
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வெங்கடேஷ் பாத் மற்றும் செப் தாமோதரன் இருவரும் வீற்றிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து பிரபல விஜேவும் நடிகருமான ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில்தான் ஷ்ருதிகாவிடம் நடுவர்கள் அவருடைய குடும்பப் பின்னணி பற்றி கேட்டபோது நடிகை ஸ்ருதிகா, தான் பழம்பெரும் நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
கருப்பு வெள்ளை காலத்திலிருந்து எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தது முதல் ரஜினிகாந்துடன் இணைந்து தில்லு முல்லு திரைப்படத்தில் நடித்தது உட்பட பல திரைப்படங்களில் தேங்காய் சீனிவாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.