புதுமுக இயக்குநர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில், விஷால் தயாரித்து நடித்த 'சக்ரா' படம் பிப்ரவரி 19 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த, படத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தை வெளியிடுவதற்கு இருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா ஹீரோயின்களாக இப்படத்தின் ரிலீஸ் நேரத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து இயக்குநர் ஆனந்தன் படமாக்கியதாக அளித்த மனுவின் பேரில் முன்னதாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த தடை நீங்கியுள்ளது.
இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், “ஆமாம், எப்போதுமே தடைகள், சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறேன். எனினும் எப்போதும் எனக்கும், எனது தொழிலுக்கும், திரைப்படத் துறை தொடர்பான எதற்கும் உண்மையாகவே இருந்துள்ளேன்.
இப்போது அனைத்தும் க்ளியர் ஆகிவிட்டது. சக்ரா திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியிடப்படும், பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சக்ரா திரைப்படம்வெளியாகிறது. தயாரிப்பாளர் மட்டுமல்ல, படத்தில் பணிபுரிந்த அனைவரும் சம்மந்தப்பட்ட இப்படத்தின் வெளியீட்டு தடை விவகாரத்தில் சரியான நேரத்தில் உத்தரவை வழங்கிய மாண்புமிகு உயர்நீதிமன்றத்திற்கு நன்றி, குறித்த நேரங்களில் படம் வெளியிடப்படும். உண்மை எப்போதும் வெல்லும்!” என குறிப்பிட்டுள்ளார்.