பிக்பாஸ் வீட்டில் சமீப காலமாகவே பிரியங்காவுக்கும் அக்ஷராவுக்குமான சண்டைகள் அதிகப்படியாக நடந்ததை பார்க்க முடிந்தது. முன்னதாக பிரியங்கா பலரைடும் டிரிகர் பண்ணுவதாக அக்ஷரா, பிரியங்காவை நாமினேட் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கிடையே சண்டையும் இல்லாமல், நெருங்கிய உறவும் இல்லாத சூழல் நிலவி வந்தது.
ஆனால் சமீபமாய் நடந்த டயஸ் உருட்டும் டாஸ்கிற்கு முன்னதாகவெ அக்ஷராவுக்கும் பிரியங்காவுக்கும் அவ்வப்போது உண்டான உரசல் புதுமையாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அவரவர்களும் தங்கள் அணிக்காக விளையாடுவதுதான் என்பதாக இருந்தது. எனினும் கடைசியாக நடந்த டயஸ் உருட்டும் டாஸ்கில் ராஜூ, டயஸ் மீது ஏறி அமர்ந்ததால், அக்ஷரா கோபம் ஆகிவிட்டார்.
இதனை அடுத்து, ராஜூவிடம் கடுகடுத்த அக்ஷரா, “டயஸ் மேலே வரும்போது அதில் யார் முகம் இருக்கிறதோ, அவர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப் படுவார்கள். அப்படி இருக்கம் டயஸை உருட்டி தான் ஆக வேண்டும். ஆனால் நீ, உருட்ட விடுவதில்லை எனும்போது, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று காட்டமாகக் கேட்டார்.
இதற்கு ராஜூ, “சும்மா இரு.. ஒன்னும் பண்ணாத” என சொல்ல, அக்ஷரா ராஜூவை ஆங்கிலத்தில் நொந்துகொண்டே சென்று அமர்ந்தார். அப்போது அக்ஷராவிடம் பிரியங்கா தமிழில் பேசச் சொல்லி சொன்னார். இதற்கு அக்ஷரா, “போம்மா” என சொன்னார். இதனால் பிரியங்கா பதிலுக்கு, “இந்த பேச்செல்லாம் எங்கிட்ட வேணாம்” என கூறியிருந்தார்.
அதன் பிறகு தனக்கும் ஒரு Self Respect இருக்கு என பிரியங்கா கூற, பதிலுக்கு, “எங்களுக்கெல்லாம் இல்லையா?? நான் ராஜூவிடம் சண்டை போட்டு பேசிக்கிட்டு இருக்கும்போது கூட, இவ நடுவர் என்றும் இவள் பேசுவதை கேட வேண்டும் என்றும் பின்னாடி இருந்து நொய் நொய்னு பேசிட்டே இருக்கா?!” என்று வருணிடம் அக்ஷரா வெடித்தார்.
இந்நிலையில் நிரூப், அக்ஷராவிடம் பேசும்போது, “இப்போது நாம் பேசும்போது கூட இடையிடையே ஆங்கிலம் வந்துவிடுவதை மறந்து விடுகிறோமே இதேபோல், நாம் இயல்பாக பேசும்போது, மறந்து ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிவிடுவோம். அது வெளியில் இருக்கும் மக்களுக்கு புரியாமல் போய்விடும். ஒருவேளை பிரியங்கா அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கலாம் அல்லவா?” என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் அக்ஷரா, “இல்லை. அதேதான் நானும் சொல்றேன், அவள் ரொம்ப எமோஷனல் ஆகும்போதோ, ஒரு உச்சநிலைக்கு போகும்போதே ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிவிடுகிறாள்.. இதுவரை ஒரு பத்தாயிரம் தடவை அவள் அப்படி நடந்திருக்கிறாள். அதே தானே எங்களுக்கு? உங்களுக்கு வந்தா ரத்தம்? எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என கேட்டார்.