RRR நாயகி ஆலியா பட் கலக்கிய ‘கங்குபாய்’ OTT ரிலீஸ் அறிவிப்பு … எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பாலிவுட் படமான கங்குபாய் கத்தியவாடி பிப்ரவரி 25 ஆம் தேதி ரிலீஸானது.

Advertising
>
Advertising

Also Read | தியேட்டரில் தெறிக்க விட்ட PUNCH-கள் … KGF ராக்கியின் காந்த குரலுக்கு சொந்தக் காரர் இவர்தான்!

அறிமுகமும் வளர்ச்சியும்….

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக குறுகிய காலத்தில் வளர்ந்துள்ளவர் நடிகை ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும், சமூகவலைதளங்கள், விளம்பர படங்கள் மூலமாக இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக உருவானார். இதையடுத்து இவர் சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான RRR படத்தில் நடித்து தென்னிந்திய படங்களிலும் அறிமுகமாகி உள்ளார்.

கங்குபாய் கத்தியவாடி…

‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படமாக ‘கங்குபாய் கத்தியவாடி’ சமீபத்தில் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி வெளியாகிய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மும்பையின் காமத்திபுராவில் வசித்துவந்ததாக சொல்லப்படும் 'கங்குபாய் கொத்தேவாலி' என்பவரின் வாழ்க்கையை கருவாக எடுத்துக்கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கங்குபாயாக நடித்த ஆலியா பட்டின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது. அதுபோலவே அவரின் நடிப்புக்கு விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்தன.

ஓடிடி ரிலீஸ்..

இந்நிலையில் இந்த படம் ரிலீஸாகி இரண்டு மாதங்கள் நெருங்கிவரும் நிலையில் இப்போது இதன் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக நெட்பிளிக்ஸ் இந்தியா தற்போது அறிவித்துள்ளது.

Also Read | ”காத்துவாக்குல ரெண்டு காதல்”… மற்ற மொழிகளில் படத்தின் title இதுதான்! வெளியான செம்ம தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Alia bhatt starred gangubai kathiawadi in Netflix ott

People looking for online information on Alia Bhatt, ஆலியா பட், கங்குபாய் கத்தியவாடி, Gangubai Kathiawadi, Gangubai kathiawadi in OTT will find this news story useful.