நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ஆலியா பட் போட்டோஷூட்.. அவரே சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட் நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. வெளியான முதல் நாள் ஷூட்டிங் பூஜை வீடியோ!

ஆலியா பட், பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது.

சமீபத்தில் RRR படத்திலும், டார்லிங் படத்திலும்  நடித்திருந்தார். ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனர். பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்தார். இந்நிலையில் நடிகை ஆலியா பட் நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸை ஒட்டி இந்த போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இன்னும் இரண்டு வாரத்தில் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என ஆலியா பட் அறிவித்துள்ளார்.

Also Read | 'LIGER' முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடி ரூபாயா? மாஸ் சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா!

தொடர்புடைய இணைப்புகள்

Alia Bhatt photoshoot with baby bump for brahmastra

People looking for online information on Alia Bhatt, Alia Bhatt photoshoot, Alia Bhatt photoshoot with baby bump, Brahmastra will find this news story useful.