TRENDING: நிறைமாத கர்ப்பத்துடன் ஆலியா பட் போட்டோஷூட்.. போட்டோஸ் சும்மா அள்ளுதே! பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட்  நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | பிரபல OTT-க்கு 'ஜெய் பீம்' தா.செ. ஞானவேல் இயக்கும் அடுத்த படம்.. உண்மைக் கதையா?

ஆலியா பட், பாலிவுட்டின் முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர், 2012 ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டில் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் RRR, டார்லிங், பிரம்மாஸ்திரா படங்களிலும் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட் தற்போது ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் ஆலியா நடித்து வருகிறார்.

நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள ரன்பீர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார். பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை ஆலியா பட் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் நடிகை ஆலியா பட்டுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் வளைகாப்பு நடந்தது. ஆலியா பட் குடும்பம் & ரன்பீர் கபூர் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆலியா பட் நிறைமாத கர்ப்பத்துடன் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக உடை அணிந்து புகைப்படங்களில் தோன்றியுள்ளார்.

Also Read | BREAKING: நாக சைதன்யா & வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை! செம்ம

தொடர்புடைய இணைப்புகள்

Alia Bhatt Kapoor Latest Photoshoot with Baby Bump

People looking for online information on Alia Bhatt, Alia Bhatt Kapoor Latest Photoshoot will find this news story useful.