காதலிக்கும் நடிகரை ‘இப்படி ஒரு’ சர்ப்ரைசில் ஆழ்த்திய இளம் நடிகை! வாயை பிளந்த நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகைகளில் பிரபலமானவர் ஆலியா பட். இவர் தன் காதலருக்காக சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ரிசார்ட் ஒன்றை ஒரு இரவுக்கு புக் செய்திருக்கிறார். இந்த தகவல்தான் தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது.

Alia Bhatt books costly wild resort for her life Ranbir Kapoor

நடிகை ஆலியா பட், நான்கு வருடங்களாக காதலித்து வரும் அந்த பிரபலம் வேறு யாருமல்ல நடிகர் ரன்பீர் கபூர் தான்.

Alia Bhatt books costly wild resort for her life Ranbir Kapoor

தமிழில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி மிகவும் பிரபலம். இவர்களின் க்யூட்டான இணைக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்வதாக அறிவித்து இருக்கிற நிலையில், தற்போது திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

Alia Bhatt books costly wild resort for her life Ranbir Kapoor

நானும் ரவுடிதான் திரைப்படம் மூலம் தொடங்கிய இவர்களின் பயணம் காதலாக மாறி தற்போது திருமணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா இணைகிறார்.

இந்த ஜோடியை போலவே பாலிவுட்டில் பிரபலமான ஜோடியாக விளங்குகிறார்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி. இந்த நிலையில்தான் ரன்பீர் கபூரின் 29வது பிறந்தநாள் விழா அண்மையில் நடந்தது. இந்த பிறந்த நாளையொட்டி தன்னுடைய காதலர் ரன்பீர் கபூருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் ஒரு மலைப்பகுதி ரிசார்ட்டை ஆலியா பட் புக் செய்திருக்கிறார்.

கிரானைட் கற்களால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட இந்த அழகான அருமையான ரிசார்ட், பார்ப்பதற்கே கொள்ளை அழகுடன் விளங்குகிறது. இப்பகுதியின் மலைவாழ் மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த ரிசார்ட், இங்கு தங்குபவர்களுக்கு ஒரு வைல்டு அனுபவம் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு இரவுக்கு சுமார் ரூ.1 முதல் ரூ. 1 1/2 லட்சம் என்று கூறப்படும் இந்த ரிசார்ட்டில்தான், ஆலியா பட், தன் காதலர் ரன்பீர் கபூர் புக் செய்திருக்கிறார். அண்மையில் ரன்பீர் கபூரின் இல்ல விசேஷத்துக்கு, ஆலியா பட் சென்று இருப்பதும் ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட்டின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ரன்பீர் கபூர் வாழ்த்து சொல்லி இருப்பதும் என எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த க்யூட்டான ஜோடி பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.

மேலும் ரன்பீர் கபூருடன் கடற்கரையோரம் சென்று ஆலியா பட்,  தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ஹேப்பி பர்த்டே மை லைஃப்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இவர்கள் இருவரும் ஜோத்பூர் விமான நிலையத்திற்கு வந்தடைந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த நிலையில் தன்னுடைய காதலருக்காக இப்படி ஒரு ரிசார்ட் புக் பண்ணி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆலியா பட்டின் நெகிழ்ச்சி செயல், நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: "வாழ்க்கைல எடுத்த தப்பான முடிவு?.. "இந்த சீரியல் தான்"..  'பாரதி கண்ணம்மா' வெண்பா பரபரப்பு பதில்!

மற்ற செய்திகள்

Alia Bhatt books costly wild resort for her life Ranbir Kapoor

People looking for online information on Alia Bhatt, Ranbir Kapoor will find this news story useful.