ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெடிய போடுங்க.. பிரபல OTT-யில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்... எப்போ? எதுல?
தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது. டிவிவி தானய்யா தயாரித்த 'ஆர்ஆர்ஆர்'-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு என்று இயக்குநர் திரு ராஜமௌலி கூறியுள்ளார்.
RRR படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலாக ஈட்டியுள்ளது. இது பாகுபலி படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் ஆகும். அதேபோல் முதல் மூன்று நாளில் 500 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியுள்ளது.
இந்நிலையில் RRR படத்தில் தனது முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் ராஜமௌலியை அன்ஃபாலோ செய்ததாகவும், RRR படம் சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியதாகவும் தகவல்கள் பரவின.
இதனை முன்னிட்டு நடிகை ஆலியா பட் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இன்றைய செய்திகளில், நான் RRR சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கிவிட்டேன் என்று வந்துள்ளன, ஏனெனில் நான் RRR குழு மீது வருத்தமாக இருக்கிறேன் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்ஸ்டாகிராம் பதிவு கட்டங்களை போன்ற தற்செயலான ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அனுமானங்களைச் செய்ய வேண்டாம் என்று நான் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனது இன்ஸ்டாகிராம் சுயவிவரக் கட்டத்திலிருந்து பழைய வீடியோ இடுகைகளை நான் எப்பொழுதும் மறுசீரமைப்பேன், ஏனெனில் அது ஒழுங்காக இருப்பதை நான் எப்போதும் விரும்புகிறேன்.
நான் RRR உலகின் ஒரு பகுதியாக இருந்ததற்கு எப்போதும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் சீதாவாக நடிக்க விரும்பினேன், ராஜமௌலி சார் இயக்கியது எனக்குப் பிடித்திருந்தது, தாரக் மற்றும் சரண் ஆகியோருடன் பணிபுரிவது எனக்குப் பிடித்திருந்தது.
இந்தப் படத்தில் எனது அனுபவத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நான் விரும்பினேன்.
ராஜமௌலி சார் மற்றும் குழுவினர் பல ஆண்டுகளாக இந்த அழகான படத்தை உயிர்ப்பிக்க பல வருடங்களாக முயற்சி செய்து அனைத்து ஆற்றலையும் செலவழித்து உழைத்ததால் தான் இதை தெளிவுபடுத்துகிறேன்". என குறிப்பிடப்பட்டுள்ளார்.
சென்சாரான KGF Chapter 2... ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? முழு தகவல்