தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்.
இவரது மகன்கள் இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகர் ஏ.எல்.உதயா. இயக்குநர் ஏ.எல்.விஜய் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் நடிப்பில் திரைப்படங்களை இயக்கியவர். இதேபோல் ஏ.எல்.உதயா, ஏ.எல்.விஜய் இயக்கிய திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர்.
இந்நிலையில் ஏ.எல்.அழகப்பனின் மனைவியும், ஏ.எல்.விஜய் மற்றும் ஏ.எல்.உதயா ஆகியோரது தாயாருமான ஏ.எல்.வள்ளியம்மை அவர்கள் சென்னையில் இன்று (ஜூலை 17, 2022) மரணம் அடைந்துள்ள சோக செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 67.
சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள இவர்களது இல்லத்தில் ஏ.எல்.வள்ளியம்மை அவர்களுக்கு இறுதி அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தப்படுகிறது. திரையுலக கலைஞர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும், நடிகர் சங்கத்தினரும் ஏ.எல்.வள்ளியம்மை அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.