”சூப்பர் ஹீரோவா கூட இருந்துடலாம்… ஆனா…” அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் டிரைலர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் ‘ரக்ஷா பந்தன்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ”சுயத்தை தேடும் பயணம்…” பல ஆசனங்களை செய்து அசத்தும் கீர்த்தி சுரேஷ்… viral video

அக்ஷய் குமார்- ஆனந்த் எல் ராய் கூட்டணி…

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் படத்துக்கு ரக்ஷா பந்தன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தன் படம் ஆகஸ்ட் 11,2022 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தார். அத்ரங்கி ரே படத்திற்கு பிறகு ரக்ஷா பந்தனில் அக்ஷய் குமார் - ஆனந்த் எல் ராய் கூட்டணி இணைந்துள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கிய தனு வெட்ஸ் மனு, அம்பிகாபதி உள்ளிட்ட படங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவையாக அமைந்தன. அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் ‘ரக்ஷா பந்தன்’ திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

ரக்ஷா பந்தன் டிரைலர்…

இந்நிலையில் தற்போது ரக்ஷா பந்தன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரில் நான்கு தங்கைகளோடு பெற்றோர் இல்லாமல் வாழும் மூத்த அண்ணனின் போராட்டங்களை சொல்லும் விதமாக வெளியாகியுள்ளது. ஆனந்த் எல் ராயின் வழக்கமான நகைச்சுவை ததும்பும் கதைக்களமாக ரக்ஷா பந்தன் திரைப்படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள்…

ரக்ஷா பந்தன் வெளியாகும் அதே நாளில் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா திரைப்படமும் வெளியாகிறது. ஒரே நாளில் இரண்டு பாலிவுட் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

Also Read | மீனவ தமிழ்ப் பையன், மார்வாடி பொண்ணு… வித்தியாசமான கதையில் மகனை இயக்கும் வில்லன் நடிகர்

தொடர்புடைய இணைப்புகள்

Akshay kumar raksha bandhan movie trailer released

People looking for online information on Akshay Kumar, Raksha bandhan movie, Raksha bandhan movie trailer updates will find this news story useful.