பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் சிபி மற்றும் அக்ஷரா இருவருக்கும் இடையேயான மோதல் அனைவரும் அறிந்ததுதான்.
முன்னதாக பால் பண்ணையில் பால் சேகரிக்கக் கூடிய செண்பகமே செண்பகமே டாஸ்கின்போது சிபிக்கும் அக்ஷராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதத்திற்கு காரணம் சிபி, அக்ஷராவின் கையிலிருந்த, பால் சேகரிக்கப்பட்ட பாட்டிலை பிடுங்கியதுதான். ஒரு வழியாக இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து அடுத்த டாஸ்க் வந்தது.
அதாவது பொம்மை டாஸ்க். இந்த பொம்மை டாஸ்க்கில், அக்ஷராவுக்கும் நிரூப்புக்கும்தான் பிரச்சனை வந்தது. இதனைத் தொடர்ந்து அக்ஷராவுக்கு வருண் சப்போர்ட் செய்து வந்தார். அதனால் இந்த சண்டை வருண் மற்றும் நிரூப் இருவருக்கும் இடையேயான சண்டையாக மாறியது. ஆனாலும் சிபி தன்னுடைய கருத்தை பதிவு செய்ய வந்த போது, தகாத வார்த்தைகளை பேசியதால் டென்ஷனான அக்ஷரா, “எப்படி அந்த வார்த்தையை பேசுவாய்? என்ன வார்த்தை பேசுறான் இவன்?” என்று ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் கத்தி கூப்பாடு போட்டார்.
அதன்பின்னும் பள்ளிக் காலங்களை நினைவூட்டும் கனா காணும் காலங்கள் டாஸ்க் வந்தபோது சிபி வார்டனாக பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போது மாணவராக இருந்த அக்ஷராவுக்கு ராஜூ திருக்குறள் கற்றுத்தந்து கொண்டிருந்த போது, அக்ஷரா 5 திருக்குறளை மனப்பாடம் செய்து சொல்ல வேண்டும் என்றும் சிபி கூறியிருந்தார்.
ஆனால், அக்ஷரா தன் வேலைகளை செய்ய முடியாமல், சாப்பிட முடியாமல் இருந்ததாலும், அந்த நேரத்தில் சிபி கடுமையான விதிகளை விதித்தாலும், சிபியிடம் கோபப்பட்டு கத்திவிட்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் அக்ஷராவை அழைத்து பேசியிருக்கிறார். என்ன பேசினார் என்று தெரியவில்லை என்றாலும், அக்ஷரா அடுத்து இயல்பாக இருக்கத் தொடங்கினார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் ட்ருத் ஆர் டேர் போட்டியை ஹவுஸ்மேட்ஸ் விளையாண்டு வந்தனர். அப்போது ட்ரூத் ஆர் டேர் பாட்டிலை சிபி, சுற்றி விட அது அக்ஷராவின் பக்கம் போய் நிற்க, அப்போது அக்ஷராவிடம், சிபி, “இரண்டு அழுக்கு துணிகளை சென்று துவைத்துவிட்டு வாருங்கள்!” என்று கூறுகிறார்.
அதற்கு அக்ஷரா, காட்டமாக ஒரே வார்த்தையாக, “முடியாது” என்று ஒரே போடாகப் போடுகிறார் . இன்னும் இவர்களுக்குள் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்ற பரபரப்பு அடங்கியபாடில்லை. அவை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.