அக்ஷரா ஹாசன் நடித்த புதிய தமிழ் படம்..நேரடியாக பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை, இந்தியா, மார்ச்-21 2022: சர்வதேச திரைப்பட விழா சர்க்யூட்டில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்ற காமெடி டிராமா கதைக்களம் கொண்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (தி மித் ஆஃப் தி குட் கேர்ள்) திரைபடத்தை தற்போது Prime Video இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

Advertising
>
Advertising

அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் உஷா உதுப், அஞ்சனா ஜெயபிரகாஷ், மால்குடி சுபா, ஜானகி சபேஷ் மற்றும் சுரேஷ் சந்திர மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ட்ரெண்ட் லவுட் தயாரித்து, ராஜா ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள இப்படம், HBO-இன் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழா, பாஸ்டனில் நடந்த கலிடோஸ்கோப் இந்திய திரைப்பட விழா, சிகாகோ தெற்காசிய திரைப்பட விழா, அட்லாண்டா இந்திய திரைப்பட விழா, சியாட்டிலில் தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா மற்றும் கனடாவில் மொசைக் சர்வதேச தெற்காசிய திரைப்பட விழா போன்ற பல்வேறு மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் தற்போது இந்தியாவில் உள்ள Prime மெம்பர்களுக்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

அச்சம் (fear ), மடம் (Innocence ), நாணம் (Coyness ), பயிர்ப்பு (Chastity ) ஆகிய நான்கு குணங்களையும் ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் கொண்டிருக்க வேண்டும் என்பது மூத்தோர் வாக்கு. பழமைவாத பின்னணியில் இருந்து வரும் 19 வயது சிறுமியான பவித்ராவை இத்திரைப்படம் மையமாகக் கொண்டு சுழல்கிறது. அனைத்தையும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்ட இப்புத்திசாலிப் பெண், சமூக எதிர்பார்ப்புகளுக்கும் தனிப்பட்ட ஆசைகளுக்கும் இடையில் எவ்வாறு சிக்கித் தவிக்கிறாள் என்பதை இத்திரைப்படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

எழுத்தாளரும் இயக்குனருமான ராஜா ராமமூர்த்தி கூறுகையில் “நான் இயக்குனராக அறிமுகமான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் எதிர்பார்ப்புடன் அந்நாளுக்காகக் நான் காத்திருக்கிறேன்.

இப்படம் ஓர் இளம் பெண்ணின் பார்வையில் விவரிக்கப்பட்ட ஒரு கதை, இது தமிழ் சினிமாவில் இதுவரை முயற்சி செய்யப்படத ஒன்று. பெண் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிகையில் அவர்கள் அளித்த ஆலோசனைகள் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தை அற்புதமாக உயிர்ப்பிக்க மேலும் உதவியது. இளம் மற்றும் மிகவும் பல்துறை திறன் கொண்ட அக்ஷரா மற்றும் அனுபவமிக்க உஷா உதுப் ஆகியோருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் எனது முதல் படத்திலேயே இத்தகைய சிறந்த நடிகர்களுடன் பணியாற்றத் கிடைத்த வாய்ப்பு குறித்துப் பெருமைப்படுகிறேன். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் எங்கள் அன்பின் உழைப்பை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்றார்.

“ராஜா அவர்கள் என்னிடம் கதையைச் சொன்னபோதே, ​​இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே எழுந்தது. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு நமது தினசரி ஒரு பகுதியை எடுத்துக் காட்டும் திரைப்படம் எனலாம். ஓர் இளம் பெண் தனது ஆசைகள் மற்றும் குடும்ப அழுத்தங்களுக்கு இடையில் போராடும் சூழலை விளக்கும் இப்படத்துடன் ஒவ்வொரு இளைஞரும் தன்னைக் காண்பார்கள் நான் நம்புகிறேன். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் பெற்ற அன்பு மற்றும் பாராட்டுக்களால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் நாடு முழுவதும் உள்ள பிரைம் வீடியோ பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்." என்று அக்ஷரா ஹாசன் கூறினார்.

“பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்பும் எனக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படம் எனக்கு உண்மையிலேயே ஸ்பெஷல்” இந்தப் படத்தில் நான் அக்ஷராவின் பாட்டியாக, ஒரு பிரபல மூத்த கர்நாடக இசைப் பாடகியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதனால் நான் இப்படத்தில் பாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்படம் மிகவும் அற்புதமாக உருவெடுத்துள்ளது, இது ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டும்மல்ல, உங்களுக்கும் உங்கள் உணர்வுகளுக்கும் நேர்மையாக இருங்கள் எனும் மிக முக்கியமான செய்தியையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு Amazon Prime Video-இல் ஸ்ட்ரீமிங் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்” என்கிறார் உஷா உதுப்.

அக்ஷரா ஹாசன் நடித்த புதிய தமிழ் படம்..நேரடியாக பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Akshara Haasan Achcham Madam Naanam Payirppu on Prime Video

People looking for online information on Achcham Madam Naanam Payirppu, Akshara Haasan, Amazon Prime Video, Prime Video, Usha Uthup will find this news story useful.