அக்‌ஷராவின் கதைக்கு ஹவுஸ்மேட்ஸின் ரியாக்‌ஷன்! தனியே போய் சத்தமில்லாமல் அழுத அக்‌ஷரா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் கதை சொல்லும் டாஸ்கில் மாடல் அக்‌ஷரா தன் கதையை கூறியுள்ளார்.

அதில்,  “நான் சென்னை பொண்ணு. தமிழ் நன்றாக பேசுவேன். அப்பா புல்லட் ப்ரூப் தயாரிப்பு தொடர்பான தொழில் செய்தார். ஒருமுறை அண்ணா மற்றும் அப்பா இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது அப்பாவுக்கு முதல் அட்டாக் வந்திருக்கிறது. அவர் அவ்வப்போது விளையாடுவார்.

அப்போது அவர் அண்ணனுடன் விளையாடினார் என நினைத்தேன். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது குடும்பத்தினர் அனைவரும் வந்து விட்டனர். அப்போதும் நான் அப்பா விளையாண்டு கொண்டிருப்பதாக நினைத்தேன். அம்மா அழுது கொண்டிருந்தார். எனக்கு என்ன நடந்தது என்று புரிய சில வருடங்கள் ஆனது.

அப்பா என் முதல் ஹீரோ. பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பெற்றோர்  வேண்டிக்கொண்டார்கள். அப்படிப் பிறந்த பெண் குழந்தை நான். இப்போதும் அப்பா இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.” என்று பேசியுள்ளார். மேலும் தன் அண்ணாவைப் பற்றி பேசிய அக்ஷரா. “அண்ணா என் இரண்டாவது ஹீரோ. நான் குதி என்று சொன்னால் என் அண்ணன் குதித்து விடுவான். அவன் என் முதல் குழந்தை என் தங்கை தான் என்று என்னை சொல்வான்.

அவன் எனது இரண்டாவது ஹீரோ. அப்பாவின் தொழிற்சாலைக்கு சீல் வைத்தார்கள். குடும்பத்தில் பல பிரச்சினைகள் நடந்தது. எல்லாத்தையும் அவனே பார்த்துக் கொண்டான். எனக்கு எதுவுமே தெரியாது. அப்பா இறக்கும் போது அம்மாவுக்கு வயது 30, 31 இருக்கும்.

இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அனைவரும் கூறினர். அவருக்கு நான் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட படிக்கும். தனக்கு இன்னொரு கணவர் கிடைப்பார், தன் பொண்ணுக்கு(அக்‌ஷராவுக்கு) இன்னொரு தந்தை கிடைக்க மாட்டார் என்று சொல்லி திருமணத்தை நிராகரித்தார். என் வீட்டில் நான் எதுவுமே செய்ய தேவை இல்லை. நான் கேட்டதெல்லாம் கிடைக்கும் நான் சொல்வதை எல்லாம் செய்வார்கள். என்னை பாதுகாத்து வளர்த்தனர்.

எனக்கு கொஞ்சம் ஸ்டிரஸ் அதிகம். சின்ன விஷயத்துக்கும் அழுவேன். மாடலிங்  செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனினும் அம்மா அண்ணா என்று குறுகிய சூழலில் வளர்ந்த நான், அந்த சவுகரியமான சூழலில் இருந்து வெளியே வந்து போராட நினைத்தேன். ஒருநாள் அம்மாவுக்கு கிட்னி பிரச்சனை. உடல் நிலை சரியில்லாமல் போனது, அவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் நான் இந்தியாவுக்காக மாடலிங் செய்ய வெளிநாடு செல்ல வேண்டிய நெருக்கடி.

அப்போது அந்த நெருக்கடியான சூழலில், அம்மா என்னிடம், நீ நாட்டுக்காக செல்கிறாய் .. இந்தியாவை பிரதிபலிப்பதாக செல்கிறாய்.. இந்தியாவின் சார்பாக நீ செல்லத்தான் வேண்டும் என்று கூறினார். எனினும் மக்களிடையே பிரபலமாக வேண்டி விரும்பி பிக்பாஸ் வந்தேன்” என்று அக்‌ஷ்ரா குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் தன் குட்டி ஸ்டோரி என்றும் அந்த கதையை முடித்து பிறகு அக்ஷரா தெரிவித்திருக்கிறார்.

இந்த கதைக்கு விஜே பிரியங்கா டிஸ்லைக் போட்டுவிட்டார். இதுபற்றி ராஜூ உள்ளிட்டோர் முன்னிலையில் பேசிய பிரியங்கா,  “அக்‌ஷரா கேட்டதெல்லாம் அவளுக்கு கிடைத்துவிட்டது. அவள் பி.எம்.டபுள்யூ காரில் வருகிறாள் என்றெல்லாம் இருப்பது வேறு. ஆனால் அவள் கதையில் அவள் என்ன செய்தால் என்பதுதான் முக்கியம். அவள் அவளுக்காக ஒன்றை செய்ய வேண்டும். அதற்குத்தான் அப்படி டிஸ்லைக் கொடுத்தேன். அதை அவள் ஊக்கமாக எடுத்துக்கொண்டு அவளை வெளிக்கொண்டு வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அக்‌ஷராவிடம் பேசிய பிரியங்கா, “இந்த ஷோவை விடு.. உனக்குனு நீ என்ன பண்ணனும்னு இருக்கும், அதை செய்” என கூறியிருந்தார். இதேபோல் ராஜூவும் “உன் கதை ஃப்ளாட்டாக இருந்தாலும், எல்லாரும் டிஸ்லைக் கொடுக்கும்போது, நானும் அதையே கொடுக்கக் கூடாது என்றுதான் லைக் கொடுத்தேன்!” என கூறியுள்ளார்.

ஆனால் இதுகுறித்து பேசிய அக்‌ஷரா ரெட்டி, “அதற்காக குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டாம். எனக்கு மற்றவர்களைப் போல் சொல்ல வராது அவ்வளவுதான்.” என சமாதானமாக பேசிவிட்டு, தனியே வந்து நின்று சில நிமிடங்கள் மௌனமாக அழுதுகொண்டிருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Akshara cries housmates feels no ups and downs in her story

People looking for online information on Akshara Reddy, VJ Priyanka will find this news story useful.