"கடுப்பாயிடுவேன்!!".. ஆக்ரோஷமாக கத்தி.. அழகுப்பொருளை உடைத்து பறக்கவிட்ட அக்‌ஷரா! நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் தற்போது அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறி இருக்கின்றனர்.

akshara angry shout to ciby and breaking things biggbosstamil5
Advertising
>
Advertising

இதில் சில போட்டியாளர்கள் ஆசிரியர்களாகவும் இருக்கின்றனர். குறிப்பாக ராஜூ, அபிஷேக் மற்றும் புதிதாக பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கும் போட்டியாளர் அமீர் உள்ளிட்டோர் ஆசிரியர்களாக மாறியிருக்கின்றனர். சிபி இந்த போர்டிங் பள்ளியின் வார்டனாக வலம் வருகிறார்.

akshara angry shout to ciby and breaking things biggbosstamil5

இதனிடையே வார்டன் சிபி, பலருக்கும் அவ்வப்போது பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் அக்‌ஷராவையும் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, நேரத்துக்கு வந்து உட்கார், சொல்வதை பின்பற்று என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கவும் அக்‌ஷரா, தன் வேலைகளை செய்ய விடாமல், நேரக்கட்டுப்பாடு விதிப்பதாக சற்றே கடுப்பாகிவிட்டார்.

இதனை அடுத்து சிபியை எதிர்த்து பேசிய அக்‌ஷரா, “ஓவராக பண்ண கூடாது!” என்று கோபப்பட்டு பொருட்களை உடைத்து விட்டு டிரெஸ்ஸிங் ரூம் செல்கிறார். அதன்பிறகு அவரை பலரும் சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். அபினய் உள்ளிட்டோர், “இதையெல்லாம் செய்வதற்கு ஒப்புக்கொண்டால் செய்ய வேண்டும். அப்படி சொல்லிவிட்டு ஏன் இப்படி செய்கிறாய்?” என்று சொல்ல, அக்‌ஷராவோ, “நான் ஒப்புக்கொள்ளவே இல்லை”! என்று கூறுகிறார்.

அப்போது அக்‌ஷராவிடம் பேச ராஜூ வர, அவரிடம், “நீ பேசாத ராஜூ ஓவரா பண்ணாத!” என அக்‌ஷரா எச்சரிக்க, அங்கு சிபியும் வருகிறார். அக்‌ஷராவிடம் சிபி ஏதோ சொல்ல வர, சிபியிடம் கோபமாகவும் ஆக்ரோஷமாகவும், “நீ பேசாத.. கடுப்பாயிடுவேன்.. என் கண் முன்னாடி இருக்காத,, போய்டு!” என்று அக்‌ஷரா ஆவேசமாக கத்துகிறார்.

முன்னதாக சிபி மற்றும் அக்‌ஷரா இருவரிடையே பொம்மை டாஸ்க்கில் நடந்த வாக்குவாதம் யாராலும் மறக்க முடியாதது. அப்போது சிபி அக்‌ஷராவிடம், தான் சொல்ல வந்த கருத்தை பேச அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி காட்டமாக கூறியதால்,  அக்‌ஷரா கோபப்பட்டு, “என்ன வார்த்தை பேசுறன் இவன்?” என்று மற்ற ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் ஆவேசமாக கத்தினார். இதேபோல் தற்போது மீண்டும் அக்‌ஷரா மற்றும் சிபி இருவருக்கும் இடையேயான சிக்கல் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Akshara angry shout to ciby and breaking things biggbosstamil5

People looking for online information on Akshara, AksharaReddy, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.