பிரபல கன்னட நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

Also Read | இந்த ஜனனி மேல அம்புட்டு பாசம் வெச்சேன்.. கொச்சப்படுத்திட்டா.. .. குமுறிய ஏடிகே.! bigg boss
தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள லோஹிதஸ்வ பிரசாத், சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே பெங்களூரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்தான், நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கன்னடத்தில் மட்டுமல்லாது, இவருக்கு தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்கள் உண்டு. பாலகிருஷ்ணா – போயபதி கூட்டணியிலான ஹாட்ரிக் படமான ‘அகண்டா’வில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆம், படத்தில் வரும் சின்ன பாலையாவை கைது செய்யும் ‘என்ஐஏ’ அதிகாரி கேரக்டரில் நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் நடித்துள்ளார்.
இவை தவிர, நடிகர் பாகுபலி பிரபாஸ் நடித்த சாஹோ, ஜூனியர் என்டிஆர் நடித்த ஜெய் லவ குசா ஆகிய திரைப்படங்களிலும், அரவிந்த சமேதா திரைப்படங்களிலும் நடித்துள்ள லோஹிதாஸ்வ பிரசாத்தின் மறைவு கன்னட, தெலுங்கு திரையுலகில் ஆறா சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | “முதலை வாயில கைய விட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்”.. ஃபேக்டரி டாஸ்கில் புலம்பிய தனலட்சுமி..! bigg boss