"NEVER GIVE UP".. விக்னேஷ் சிவன் ட்விட்டரில் திடீரென மாற்றப்பட்ட அஜித் ஃபோட்டோ.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

AK62 Vignesh Shivan Upload new cover Photo on Twitter
Advertising
>
Advertising

அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

AK62 Vignesh Shivan Upload new cover Photo on Twitter

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

AK62 Vignesh Shivan Upload new cover Photo on Twitter

"திரு.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது." என லைக்கா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில நாட்களாக லண்டனில் இருந்து வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே வைத்த பழைய கவர் போட்டோவை மாற்றி Never Give Up என்ற தலைப்புடன் "நீங்கள் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்ய முயற்சிப்பதை விட்டுவிடாதீர்கள். அன்பும் உத்வேகமும் இருக்கும் இடத்தில், நீங்கள் தவறாகப் போக முடியாது என்று நினைக்கிறேன்". என்ற அமெரிக்க பாடகி எல்லா ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் புகழ்பெற்ற வாசகத்தை டிவிட்டரில் புதிய கவர் போட்டோவாக விக்னேஷ் சிவன் அப்லோடு செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AK62 Vignesh Shivan Upload new cover Photo on Twitter

People looking for online information on Ajith Kumar, AK62, Vignesh shivan will find this news story useful.