AK62: டிவிட்டரில் கவர் போட்டோவை மாற்றிய விக்னேஷ் சிவன்.. அந்த அஜித் லுக் தான் இப்போ வைரல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் கவர் போட்டோவாக அப்லோடு செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தனா வெளிய போனதும் பாதிச்ச விஷயம்.. முதல் முறையாக ஷிவின் உடைத்த சீக்ரெட்!!.. அட, ஆமால்ல!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

நேர் கொண்ட பார்வை வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  துணிவு படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த துணிவு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனலும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் குமாரின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவாக அப்லோடு செய்துள்ளார். இந்த புகைப்படம்  ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஆரம்பம் படத்தில் நடிகர் அஜித் நடித்த அசோக் குமார் கதாபாத்திரத்தின் புகைப்படமாக இந்த டிவிட்டர் கவர் போட்டோ புகைப்படம் அமைந்துள்ளது.

Also Read | 25 லட்ச ரூபாய் கடன் வாங்கும் TTF வாசன்.. அவரே சொன்ன காரணம்.. வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

AK62 Vignesh Shivan Change His Twitter Handle CP

People looking for online information on Ajith Kumar, AK62, Vignesh shivan will find this news story useful.