BREAKING: அஜித் & விக்னேஷ் சிவன் இணையும் 'AK 62'.. ஷூட்டிங் இந்த ஊர்லயா? எப்போ? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் AK 62  படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

AK62 shooting starts around Feb 10th in Mumbai deets
Advertising
>
Advertising

Also Read | கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா.. ஷூட்டிங்கில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியானது. அன்று அதிகாலை 1 மணிக்கே துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடங்கும் என  நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Also Read | சிரஞ்சீவி நடிப்பில் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்.. பிரம்மாண்ட செட்டில் ஷூட்டிங்.. வைரல் PHOTOS

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AK62 shooting starts around Feb 10th in Mumbai deets

People looking for online information on Ajith Kumar, AK62, AK62 shooting update, Vignesh shivan will find this news story useful.