விக்னேஷ் சிவன் ஓட்டிய உலகின் விலையுயர்ந்த 6 கோடி ரூபாய் சொகுசு கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2012 ஆம் ஆண்டு போடா போடி ப்டம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Advertising
>
Advertising

போடா போடி திரைப்படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதையடுத்து இருவரும் காதலர்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் மூலமாக கூழாங்கல், ராக்கி படத்தை வெளியிட்டுள்ளனர்.  தற்போது ஊர் குருவி, வாக்கிங் டாகிங் ஸ்டாபெர்ரி ஐஸ்கிரீம் ஆகிய படங்களை தயாரிக்கின்றனர்.

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியானது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனக்கு பிடித்த பெராரி காரை சென்னை எழும்பூரில் டெஸ்ட் டிரைவாக ஓட்டி மகிழ்ந்தார். 

இது குறித்து இன்ஸ்டாகிராமில் “ரொம்ப நாளா ஃபெராரி காரின் எம்பலம் தான் எனது போன் கேஸாக இருந்தது. இன்று அந்த காரை டெஸ்ட் ட்ரைவ் செய்கிறேன். இது வேறமாரியான மகிழ்ச்சியை தந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

ஃபெராரி காரின் ஒவ்வொரு மாடலிலும் மஞ்சள் பின்னணியுடன் கருப்பு நிறத்தில் புகழ்பெற்ற பிரான்சிங் ஹார்ஸ் லோகோவைக் கொண்டுள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 3.50 கோடியில் இருந்து 6 கோடி வரை விற்கப்படுகிறது. இத்தாலிய காரான மார்க்கீ ஃபெராரி 1939 இல் என்ஸோ ஃபெராரியால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைமையகம் இத்தாலியின் மரனெல்லோவில் உள்ளது. 

ஃபெராரிக்கு இந்தியாவில் இரண்டு டீலர்கள் உள்ளனர், ஒன்று மும்பை மற்றொன்று புது டெல்லியில் அமைந்துள்ளது. இதில் விக்னேஷ் சிவன் ஓட்டியது மும்பை டீலரின் கார் ஆகும். 812 Superfast, 812 GTS, SF90 Stradale, F8 Tributo, F8 Spider, 488 Pista, 488 Pista Spyder, GTC4Lusso, GTC4LussoT, Portofino, Monza SP21 உள்ளிட்ட பலதரப்பட்ட தயாரிப்புகள் உள்ளன. 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

விக்னேஷ் சிவன் ஓட்டிய உலகின் விலையுயர்ந்த 6 கோடி ரூபாய் சொகுசு கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

AK62 Director Vignesh Shivan Riding Luxurious Ferrari Car

People looking for online information on Ferrari, Nayanthara, Vignesh shivan will find this news story useful.