அஜித் நடிக்கும் 'துணிவு'.. பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் பண்ணது இவர் தானா? செம்ம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்குமார் நடிக்கும் 61வது படமான 'துணிவு' படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரபல டிசைனர் வடிவமைத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | AK61: அஜித் நடிக்கும் 'துணிவு'.. படத்தோட இசையமைப்பாளர் இவரா? போடு வெடிய!

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத்  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. விசாகப்பட்டினம் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில்  இந்த செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக படக்குழு விரைவில் பேங்காக் நகருக்கு விமானம் மூலம் புறப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துணிவு படத்தின் போஸ்டரை பிரபல டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே விவேகம், நேர்கொண்ட பார்வை, விக்ரம், பொன்னியின் செல்வன், பீஸ்ட், பிகில், மாஸ்டர், சர்கார், மெர்சல், வாரிசு படங்களின் போஸ்டரை வடிவமைத்தவர் ஆவார்.

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு'.. படத்தில் இணைந்த 'வலிமை' பட டெக்னீசியன்! இவரா?

தொடர்புடைய இணைப்புகள்

AK Ajith Kumar Thunivu First Look Poster Designer Gopi Prasanna

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK 61 Movie, Ajith Kumar Thunivu First Look Poster, AK 61 Movie, AK 61 Thunivu Movie, H Vinoth will find this news story useful.