வைரலாகும் AK 61 படத்தின் படப்பிடிப்பு பூஜை புகைப்படம்! தாரை தப்பட்டை கிழிய போகுது..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

AK 61 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் பூஜை போட்டோ வெளியாகி உள்ளது.

AK 61 Movie Shooting Spot Poojai Picture goes Viral
Advertising
>
Advertising

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

AK 61 Movie Shooting Spot Poojai Picture goes Viral

அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

AK 61 Movie Shooting Spot Poojai Picture goes Viral

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் இன்று பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கி உள்ளது.

AK61 படத்தின் பூஜை இன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் இன்று முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கி உள்ளது. இந்த புகைப்படங்களை போனிகபூர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

இதில் இயக்குனர் எச். வினோத், போனி கபூர், நிரவ் ஷா உடன் உள்ளனர். படக்குழுவில் அங்கம் வகிக்கும் நபர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AK 61 Movie Shooting Spot Poojai Picture goes Viral

People looking for online information on Ajith Kumar, AK, AK 61, AK 61 Poojai, Boney kapoor, H Vinoth, Poojai, Valimai will find this news story useful.