வேட்டி சட்டையில் இயக்குனர் H. வினோத்.. இணையத்தை கலக்கும் 'AK61' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

AK61 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் எச்.வினோத்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | சிபிராஜ் நடிப்பில் பிரபல OTT-யில் நேரடியாக வெளியாகும் 'வட்டம்'.. வெளியான சூப்பர் டிரெய்லர்!

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். வீரா, ராஜ தந்திரம் மற்றும் நடுநிசி நாய்கள் படத்தில் நடித்தவர்.

நடிகர் ஜி.எம். சுந்தரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜித் படத்தில் இரண்டாவது முறையாக G.M. சுந்தர் நடிக்கிறார்.

ஜி.எம். சுந்தர், சார்பட்டா பரம்பரை படத்தில் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்தவர். GM சுந்தர், வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக ஐஜி வேடத்தில் அரசு கதாபாத்திரத்தில் நடித்தவர்.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.

இந்நிலையில்  படப்பிடிப்பில் ரசிகர் ஒருவருடன் இயக்குனர் எச். வினோத் எடுத்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் வினோத் வேட்டி அணிந்து காட்சியளிக்கிறார்.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் சிங்கிள் பாடல் எப்போ ரிலீஸ்? A.R. ரஹ்மான் வெளியிட்ட சூப்பர் VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

AK 61 Movie H Vinoth Shooting Spot Photo with a fan

People looking for online information on Ajithkumar, AK 61, AK 61 Movie Shooting Spot, H Vinoth will find this news story useful.