AK61 பட கலை இயக்குனர் மிலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. யார் யார் இருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்தின் AK61 வது படத்தில் பணிபுரியும் பிரபல கலை இயக்குனர் மிலனின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கிரிக்கெட் வீராங்கனை மிதாலியின் பயோ-பிக்.. களமிறங்கிய நடிகை டாப்ஸி! வைரல் ஃபோட்டோஸ்

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த மாதம் ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார்.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

பிரபல கலை இயக்குனர் மிலன் பெர்ணான்டஸ் மற்றும் அவரது குழுவினர் நடிகர் அஜித் உடன் எடுத்த  BTS புகைப்படத்தை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். இதன் மூலம் AK61 படத்தில் மிலன் கலை இயக்குனராக பணிபுரிவது உறுதியானது. மிலன், ஏற்கனவே அஜித் நடித்த பில்லா, ஏகன், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றியவர்.

இந்நிலையில் இன்று மிலன் தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்வுக்கு இயக்குனர் சிவா நேரில் வந்து மிலனுக்கு கேக் ஊட்டி விட்டார். இந்நிகழ்வில் மிலனின் நண்பர்கள், அவரது குழுவினர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்களை மிலன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read | ஹீரோவாக சந்தானம் நடிக்கும் புதிய படம்.. BTS ஸ்டில்களுடன் வெளிவந்த செம்ம அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

AK 61 Movie Art Director Milan Fernandez Birthday Celebration

People looking for online information on AK 61, AK 61 Movie, Art Director Milan Fernandez, Milan Fernandez Birthday Celebration will find this news story useful.