BREAKING: வெளிநாட்டில் AK61 படத்தின் ஷூட்டிங்? ஆஹா! அதுவும் இந்த நாட்லயா? தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

AK 61 படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடை பெற உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'மாநாடு' கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் புதிய படம்.. தயாரிப்பாளர் இவரா? சூப்பர் அப்டேட்

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத்  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. விசாகப்பட்டினம் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக படக்குழு இன்று பேங்காக் நகருக்கு விமானம் மூலம் புறப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | புதிய கெட்-அப்பில் மகேஷ் பாபு.. த்ரிவிக்ரம் இயக்கும் ஆக்சன் திரைப்படத்தின் வேறலெவல் லுக்!

தொடர்புடைய இணைப்புகள்

AK 61 Movie Ajith Kumar Bangkok Thailand Schedule Shooting

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie, AK 61 Movie Shooting updates will find this news story useful.