தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

Also Read | அன்பே சிவம், பகவதி பட தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்.. சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.
சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் பவனி அமீர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்து நடிகர் அஜித், வெளியூருக்கு இன்று விமானம் மூலம் சென்றுள்ளார். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகி இருந்தன.
விமானத்தினுள் நடிகர் அஜித்தை சந்தித்த ரசிகர்கள் இருவர் அது தொடர்பாக ஒரு வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், முதலாமாண்டு திருமண நாளில் சென்னை டூ டார்ஜிலிங் செல்லும் போது விமானத்தில் நடிகர் அஜித்தை தம்பதியர் மனோஜ் சாமுவேல் & ரஞ்சினி ஶ்ரீபதி சந்தித்துள்ளனர். மேலும் ரஞ்சினி நடிகர் அஜித்தை கண்டதும் "அண்ணா ஹாய் ண்ணா" என எமோஷனல் ஆகி அழைப்பதும், விமானத்தினுள் அமர்ந்து இருக்கும் அஜித் குமார் அதற்கு ரியாக்ட் செய்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும் தான் விஜய் ரசிகர். இந்த வீடியோ பார்த்த பிறகு விஜய் சார் என்னை அழைப்பார் என மனோஜ் சாமுவேல் கூறுகிறார். மேலும் "தான் ஒரு விஜய் ரசிகர், அஜித் சார் முன் போட்டோ எடுக்கும் போது கை கட்டியதை எடுத்து விட சொல்லி கேஷூவலாக இருக்க சொன்னார்" என்றும் மனோஜ் கூறியுள்ளார்.
Also Read | "காமெடியன்ஸ்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க".. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கலக்கல் டிரெய்லர்!