உலகின் மிகப்பெரிய தியேட்டரில் ரிலீஸாகும் அஜித்குமாரின் 'துணிவு'.. மாஸ் சம்பவம் 🔥

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகப்புகழ் பெற்ற உலகின் மிகப்பெரிய தியேட்டரில் துணிவு படம் ரிலீஸாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நோ மேக்கப்.. நோ பில்ட்டர்.. தனது லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு நடிகை குஷ்பு வைரல் பதிவு!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தின் போஸ்டர்கள் & 3 சிங்கிள் பாடல்கள்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான டிரெய்லரும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

துணிவு படம், இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. துணிவு படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் 48 வினாடிகள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக படத்தின் ரிலீஸ் தேதியை நேற்று அறிவித்துள்ளார். அதன்படி துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் துணிவு படம் உலகின் மிகப்பெரிய தியேட்டரான Grand Rex Theatre Paris - ல் ஜனவரி 10 ஆம் தேதி (பிரான்ஸ் நாட்டின் நேரப்படி) திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகின்றது. 2,700 இருக்கைகள் கொண்ட  திரையில் துணிவு படம் திரையிடப்படுகிறது.

இந்த திரையரங்கம், 2,702, 500, 262, 210, 155, 125 மற்றும் 100 இருக்கைகள் கொண்ட 7 அரங்குகளும் 35 மிமீ திரையிடல் திரையுடன் டால்பி/டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டத்தில் டிஜிட்டல் - ஸ்டீரியோபோனிக் ஒலி அமைப்புடன் கூடியது

Also Read | "மனசு நெறஞ்சுருக்கு, கனவும் பலிச்சுடுச்சு".. 15 வயதில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை!!..

தொடர்புடைய இணைப்புகள்

AjithKumar Thunivu Movie Releasing at Le Grand Rex Theatre Paris

People looking for online information on Ajith Kumar, Le Grand Rex Theatre, Paris, Thunivu will find this news story useful.