அஜித் நடிக்கும் 'துணிவு'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்! தெறி போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்திற்கு இந்திய அரசின் சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம் வெளியாகி உள்ளது.

Ajithkumar Thunivu Movie Censored UA CBFC Certification
Advertising
>
Advertising

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தின் போஸ்டர்கள் & 3 சிங்கிள் பாடல்கள்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான டிரெய்லரும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

Ajithkumar Thunivu Movie Censored UA CBFC Certification

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் துணிவு படம், இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. துணிவு படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் போனி கபூர் 'துணிவு' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

போஸ்டரில் நடிகர் அஜித் குமாரின் உடல் முழுவதும் ரத்த கரைகள் விரவியுள்ளன. உடலின் வலது புறம் மட்டும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar Thunivu Movie Censored UA CBFC Certification

People looking for online information on Ajith Kumar, AK, CBFC, John Kokken, Thunivu will find this news story useful.