நடிகர் அஜித்குமார் நடித்த 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளன்ர். 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 6.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தின் கேரள தியேட்டர் ரிலீஸ் உரிமையை புஷ்பா, மாநாடு படங்களை ரிலீஸ் செய்த E4 Entertainment நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை டிவிட்டரில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும், ஜி ஸ்டூடியோசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்தின் கோயமுத்தூர் உரிமையை கற்பகம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், மாநாடு படத்தின் தமிழக வினியோகஸ்தருமான SSI Productions சுப்பையா சண்முகம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். மேலும் வலிமை படத்தின் செங்கல்ப்பட்டு ஏரியா உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆக இருப்பதாக கோபுரம் பிலிம்சால் அறிவிக்கப்பட்டது. இந்த செங்கல்ப்பட்டு ஏரியா தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஏரியாவாகும். வலிமை படத்தின் செங்கல்பட்டு உரிமையை இடிமுழக்கம், வேலன் படங்களின் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தனது ஸ்கைமேன் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார்.
வலிமை படத்தின் திருநெல்வேலி - கன்னியாகுமரி- தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய TK ஏரியா உரிமையை MKRP Productions ராம் பிரசாத் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். வலிமை படத்தின் வட, தென் ஆற்காடு ஏரியா உரிமையை ராக்போர்ட் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் முருகானந்தம் சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார். வலிமை படத்தின் சேலம் ஏரியா உரிமையை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. அதே போல் திருச்சி ஏரியாவை ஸ்ரீ துர்காம்பிகை பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது. அதே போல் சென்னை சிட்டி ஏரியாவை வலிமை படத்தின் இணை தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே சுயமாக வெளியிடுகிறது.
வலிமை படத்தின் ஒட்டு மொத்த வெளிநாட்டு தியேட்டர் வெளியீட்டு உரிமையை யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்தின் ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா, பிரான்ஸ் தியேட்டர் உரிமையை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்தின் நியூசிலாந்து, பிஜி, PNG ஆகிய தீவு நாடுகளின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய நாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் வழியாக ஆஸ்திரேலியாவில் ரிலீஸ் செய்ய உள்ளது.