மங்காத்தா & துணிவு படங்களுக்கு ரிலீஸ்ல இப்படி ஒரு கனெக்சன் இருக்கா? செம 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மங்காத்தா படத்திற்கும் துணிவு படத்திற்கும் ரிலீஸில் உள்ள கனெக்சன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நோ மேக்கப்.. நோ பில்ட்டர்.. தனது லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு நடிகை குஷ்பு வைரல் பதிவு!

நடிகர் அஜித்தின் 50 வது படமாக  2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் , யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம் ஜி, அஞ்சலி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான படம் ’மங்காத்தா’.

கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டது.

இந்த படத்தில் நடிகர் அஜித் வில்லனாக நடித்து ரசிகர்களையும், விமர்சகர்களையும் பாராட்ட வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் இந்த படம் டிரெண்ட் செட்டர் ஆனது. வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.  மேலும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் முதல் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாக மங்காத்தா அமைந்தது.

தற்போது அஜித்குமார், துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & 3 சிங்கிள் பாடல்கள்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான டிரெய்லரும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. துணிவு படம், இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. துணிவு படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் 48 வினாடிகள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மங்காத்தா & துணிவு இரண்டு படங்களின் ரிலீஸ் நாளும் புதன் கிழமையில் அமைந்துள்ளது. அஜித் நடிப்பில் மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் துணிவு திரைப்படம் தான் புதன் கிழமையில் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையில் வெளியான திரைப்படங்கள் செவ்வாய், வியாழன், வெள்ளி கிழமைகளில் மட்டும் ரிலீஸ் ஆகி உள்ளன.

Also Read | உலகின் மிகப்பெரிய தியேட்டரில் ரிலீஸாகும் அஜித்குமாரின் 'துணிவு'.. மாஸ் சம்பவம் 🔥

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar Mankatha Thunivu Wednesday Release Connect

People looking for online information on Ajith Kumar, Mankatha, Thunivu will find this news story useful.