பில்லா ஸ்டைலில் லண்டனில் வலம் வந்த நடிகர் அஜித்குமார்.. அந்த கெத்து அப்படியே! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடிகர் அஜித் வணிக வளாகத்தில் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'கைதி' படத்தின் இந்தி ரீமேக்.. இயக்குனரான நடிகர் அஜய் தேவ்கன்.. தெறிக்க விடும் BTS போட்டோ!

நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு  அஜித் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் சில புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தொடங்கிய சுற்றுப்பயணம்  பெல்ஜியம் நாட்டில் நடந்து தற்போது மீண்டும் பிரிட்டனில் நடந்து வருகிறது.

சிலநாட்களுக்கு முன் பிரிட்டன் லண்டன் நகர வீதிகளில் (ஹேட்டன் கிராஸ் நிலையம்) ரசிகர்களுடன் அஜித் எடுத்த இந்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் கோட் சூட் உடையில் லண்டனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அஜித் சென்று பொருள் வாங்கி அதற்காக பணம் கட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்தின் இந்த லுக் பில்லா ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | "சிகரெட் பிடிக்கும் காளியா.?" - சர்ச்சையான first look.. இயக்குநர் லீனா மணிமேகலை விளக்கம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar Latest London Video Goes Viral on social media

People looking for online information on Ajith Kumar, Ajithkumar Latest London Video will find this news story useful.