இமயமலையில் பிரபல நட்சத்திர விடுதியில் அஜித்.. HOTEL ஒரு நாள் வாடகை மட்டும் இவ்வளவு ரூபாயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், இமயமலையில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியுள்ள  புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | PS1 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே? சூப்பர் அப்டேட்

நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் அஜித் BMW  பைக்கை எடுத்துக்கொண்டு   ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.

இந்த பைக் சுற்றுப்பயணம் தொடர்பான புகைப்படங்களை அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் சில புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம்  நடந்தது.

பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் அஜித், தனது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் மற்றும் குடும்பத்தினருடன் லண்டனில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நடிகர் அஜித் தமிழகம் திரும்பியதும் திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டார். அங்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினார்.

பின்னர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார், இமாச்சலப் பிரதேசம் மாநிலம், மண்டி மாவட்டம் ஜரோல் சுந்தர் நகரில் உள்ள ராஜா ஹோட்டலில் நண்பர்களுடன் தங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ராஜா ஹோட்டல் உரிமையாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை ஏசி அறைகளுக்கு 2,500 ரூபாய் மட்டுமே ஆகும். இந்த ஹோட்டல் சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

AjithKumar In Raja Hotel Jarol Himachal Pradesh

People looking for online information on Ajith Kumar, AjithKumar In Raja Jarol Hotel, Himachal Pradesh will find this news story useful.