"தென்னாட்டுடைய சிவனே போற்றி..".. சாமி தரிசனத்தில் நடிகர் அஜித்.. இந்த ஊரு கோயில்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் இமயமலையில் உள்ள பிரபல சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு   ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.

ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம்  நடந்தது. ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று நடிகர் அஜித், உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத் & பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை D'one Channel தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

AjithKumar AK In Kedarnath and Bhadrinath temple today

People looking for online information on Ajith Kumar, AK, Bhadrinath, Kedarnath will find this news story useful.