துணிவு சில்லா சில்லா பாட்டுல இதை கவனிச்சீங்களா?.. அஜித்துடன் நடனமாடிய பிரபல நடிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லா பாடலில் துணிவு படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர்கள் தோன்றியுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | Chilla Chilla: துணிவு படத்தின் புதிய போஸ்டர்.. செம்ம சூப்பர் COOL லுக்கில் அஜித்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா இன்று  மாலை 6:30 வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் லிரிக் வீடியோவில் நடிகர் அஜித் குமாருடன் நடிகை மஞ்சு வாரியர், சிபி சந்திரன், பாவனி, ஆமிர் ஆகியோர் தோன்றியுள்ளனர்.

இது குறித்து நடிகர் ஆமிர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "நடிகராகவும்,
முக்கியமாக தல அஜித் சாருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் முதல் திரைப்படம். என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.. ஹெச்.வினோத் சார் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் என் குடும்பத்தாருக்கும் எனது நன்றிகள்." என ஆமிர் கூறியுள்ளார்.

 

Also Read | Chilla Chilla: "நம்மளோட வேலைய பாத்து ஊர் பேசும் தானா".. துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith with Co Actors in Thunivu Chilla Chilla Song

People looking for online information on Ajith Kumar, Chilla Chilla Song, Thunivu will find this news story useful.