அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது..."கொரோனா 2-ம் அலை காரணமாக"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வெளிநாட்டில் படத்தின் சேஸிங் காட்சியும் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் கடந்த ஜனவரி 14 அன்று ரிலீஸானது. இதனையடுத்து தல ரசிகர்களும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வாஞ்சையுடன் காத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பலரும் படக்குழுவினரை டேக் செய்தே அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் வலிமை படம் சம்பந்தமான முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் "எங்கள்‌ நிறுவனத்தின்‌ சார்பில்‌ நாங்கள்‌ கொடுத்த முந்தைய அறிக்கையில்‌ வருகின்ற மே 1ஆம்‌ தேதி அஜித்‌ குமார்‌ அவர்களின்‌ 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு , அவரது நடிப்பில்‌ , வினோத்‌ இயக்கத்தில்‌ , எங்கள்‌ நிறுவனத்தின்‌ தயாரிப்பில்‌ உருவான “வலிமை” படத்தின்‌ ௩:1௦. வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்‌.

அந்த அறிவிப்பு வெளிவரும்‌ போது , கோரோனா நோயின்‌ இரண்டாவது அலை வரும்‌ என்றோ, அதன்‌ தாக்கம்‌ சுனாமி போல தாக்கும்‌ என்றோ சிறிதும்‌ எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில்‌ தேசமெங்கும்‌ எண்ணற்றோர்‌ பொருளாதாரம்‌ இழந்து, உற்றார்‌ உறவினர்‌ உயிர்‌ இழந்து , நோய்‌ பற்றிய பீதியிலும்‌ அதிர்ச்சியிலும்‌ ஆழ்ந்து இருக்கின்றனர்‌.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில்‌ ஜீ ஸ்டுடியோஸ்‌, பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்‌, இப்படத்தில்‌ நடித்து உள்ள கலைஞர்கள்‌, பணியாற்றிய தொழில்‌ நுட்ப கலைஞர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின்‌ படி "வலிமை" படத்தின்‌ First Look வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து அனைவரின்‌ நலத்துக்காகவும்‌, பாதுகாப்புக்காகவும்‌ பிராத்திப்போம்‌" என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Valimai, Ajith

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith valimai update by boney kapoor அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட்

People looking for online information on Ajith, Valimai will find this news story useful.