ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட வலிமை பட நடிகர்.. அடுத்தடுத்து வெளிவரும் அப்டேட்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் ஐயப்பா, அந்த ஷூட்டிங்  ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அதே கூட்டணி வலிமை படத்தில் ஒன்று சேர்ந்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றது.

துபாய் அரசு மூலம் மிகப்பெரிய கௌரவத்தை பெற்ற நடிகை அமலாபால்! முழு விபரம்!

இணைந்த படக்குழு

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி,ராஜ் ஐயப்பா நடிக்கின்றனர். வில்லனாக கார்த்திகேயா நடிக்கின்றார். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.


ப்ரோமோஷன்

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்தின் பிரமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் போஸ்டர் முதல் சிங்கள் பாடலிருந்து தனது பிரமோஷனை தொடங்கிய வலிமை படக்குழு, இதைதொடர்ந்து மோஷன் போஸ்டரையும் வெளியிட்டது. இது அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று  சாதனைகளையும் படைத்த வந்தது.

வெளிவரும் அப்டேட்ஸ்

மோஷன் போஸ்டரை தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல், அம்மா பாடல் அனைவரையும் கவர்ந்தது. அந்த இரண்டு பாடல்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. பைக் ரேசிங் செய்யும் அஜித் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அஜித் செய்யும் பைக் ரேசிங்  மூலம் ரசிகர்கள் இப்படம் ரோட் சேப்டி ( Road Safety ) பற்றி இருக்குமோ என்று யோசித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, விசில் தீம் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இப்படத்தின் உரிமையை மதுரை அன்பு செழியன் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


வைரல் புகைப்படம்

அடுத்த கட்டமாக படத்தின் டிரைலருக்காக காத்துகொண்டு இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அஜித்குமாரின் HD  புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து வரும் வலிமை புகைப்படத்தால், படத்தின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது.

ராஜ் ஐய்யப்பா

தற்போது வலிமை படத்தில்அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ராஜ் ஐயப்பா, ஷூட்டிங் ஸ்பாடில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை 
தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ராஜ் ஐயப்பா, அஜித்துடன் வலிமை படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் அதர்வாவுடன் "100" என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith valimai shooting spot photo shared by Raj Ayyappa.

People looking for online information on Ajith Kumar, அஜித், வலிமை, H வினோத், H Vinoth, Raj Ayyappa, Shooting Spot, Valimai will find this news story useful.