'வலிமை' 'RRR' இரு படங்களின் ஜெர்மனி தியேட்டர் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய ஒரே நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR". இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகிறது. தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Advertising
>
Advertising

RRR

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.

Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் திரைப்படம் RRR தமிழில் இரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 185 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம்.

வலிமை

இதே போல வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஜெர்மனியில் வலிமை ஆன RRR

இந்நிலையில் வலிமை மற்றும் RRR படங்களின் ஜெர்மனி தியேட்டர் ரிலீஸ் உரிமையை கோலிவுட் Kollywood KENO நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது பற்றி தங்களது சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தின் ஒட்டு மொத்த வெளிநாட்டு தியேட்டர் வெளியீட்டு உரிமையை யுனைட்டட் இந்தியா  எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்தின் ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா, பிரான்ஸ் தியேட்டர் உரிமையை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்தின் நியூசிலாந்து, பிஜி, PNG ஆகிய தீவு நாடுகளின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய நாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் வழியாக ஆஸ்திரேலியாவில் ரிலீஸ் செய்ய உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Valimai RRR Movie Germany Theatrical Rights

People looking for online information on Ajith Kumar, Germany, RRR, RRR vs Valimai, Valimai, Valimai Release will find this news story useful.