வந்தாச்சு தல அஜித்தின் 'வலிமை' முக்கிய அப்டேட்... அப்போ மே 1 அன்னைக்கு திருவிழா தான்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வெளிநாட்டில் படத்தின் சேஸிங் காட்சியும் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் கடந்த ஜனவரி 14 அன்று ரிலீஸானது. இதனையடுத்து தல ரசிகர்களும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வாஞ்சையுடன் காத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பலரும் படக்குழுவினரை டேக் செய்தே அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிலர் அதற்கு மேலே போய் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், கிரிக்கெட் வீரர்கள் என யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்களும் வைரலானது.

இந்நிலையில் தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பியான  நியூஸ் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் முக்கியமான அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது வெளியிட்டுள்ளார். தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறும் பொழுது "வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் விநியோக வேலைகள் தல அஜித்தின் 50வது பிறந்த நாள் தினமான  மே 1 அன்று வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார். ஏற்கனவே மே 1 தல அஜித் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். அதுவும் இவ்வளவு காத்திருப்புக்கு பிறகு வலிமை படத்தின் பஸ்ட் லுக் வெளியாகும் போது வேற லெவல் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது .இந்த செய்தியை தல அஜித் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

Tags : Ajith, Valimai

தொடர்புடைய இணைப்புகள்

Ajith valimai important update அஜித்தின் 'வலிமை' முக்கிய அப்டேட்

People looking for online information on Ajith, Valimai will find this news story useful.