சென்னை, 23, பிப்ரவரி, 2022: போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் H.வினோத் பேட்டி
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்த இயக்குனர் H.வினோத், நடிகர் அஜித் குமார், வலிமை திரைப்படம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தமக்கே உரிய பாணியில் மிக இயல்பாக பதில் அளித்திருந்தார். அப்போது, இளைய மற்றும் ஓரிரு அழுத்தமான படங்களை இயக்கிய இயக்குநர்களுடன் உச்ச மற்றும் சீனியர் நட்சத்திரங்கள் கைகோர்ப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு இயக்குனர் H.வினோத் பதில் அளித்திருந்தார்.
உச்ச நட்சத்திரங்கள் எப்படி பார்க்கிறார்கள்?
அதன்படி, “நடிகர் கார்த்தியுடன் உங்களோட 2வது படம்.. அடுத்த படங்கள் (நேர்கொண்ட பார்வை, வலிமை) அஜித்துடன்... இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் படத்தைத் தொடர்ந்து கைதி படத்தை கார்த்தி நடிப்பில் இயக்கினார். அவர் இயக்கிய அடுத்த படம் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர்.. இயக்குநர் பா.ரஞ்சித் தமது 2வது படமாக மெட்ராஸ் படத்தை கார்த்தி நடிப்பில் இயக்கினார்.
அவர் இயக்கிய அடுத்த படம் நடிகர் ரஜினி நடித்த கபாலி, காலா படங்கள். இப்படி அந்த காலம் போல் இல்லாமல், 2, 3 மூன்று படங்களில் புதிய இயக்குநர்கள் ஓரிரு அழுத்தமான திரைப்படங்களை இயக்கி தங்களுடைய படைப்பையே முத்திரையாக பதிக்கும் போது, அவர்கள் மெகா ஸ்டார்களுடன் இணைய முடிகிறது. இதை உச்ச நட்சத்திரங்கள் எப்படி பார்க்கிறார்கள்?” என்று கேட்கப்பட்டிருந்தது.
அது மூட நம்பிக்கை.. எல்லாருக்கும் வொர்க் அவுட் ஆகாது
இதற்கு பதில் அளித்திருந்த இயக்குநர் H.வினோத், “சினிமா எப்படி இருக்கு என்றால், ஸ்டார் நடிகர்கள், சிலர் டைரக்டர்களே இல்லை என்று நினைக்கலாம். சில டைரக்டர்கள் நிறைய ஸ்டார் நடிகர்களே இல்லை என நினைக்கலாம். புரொடியூசர்கள் சிலர் பார்வையில் டைரக்டர்கள் நிறைய செலவை இழுத்து விட்டுருவாங்க என்றும், ஸ்டார் நடிகர்கள் எல்லாம் நிறைய சம்பளம் கேட்பார்கள் என்றும் இருக்கலாம். ஆனால் இது ஒரு பயங்கர குழப்பமான சூழல் தான். எனவே கார்த்தி சாருக்கு படம் பண்ணவுடனே விஜய் சாருக்கோ, அஜித் சாருக்கோ, ரஜினி சாருக்கோ படம் பண்ணிவிடுகிறார்கள் என்பது மூட நம்பிக்கை. அது எல்லாருக்கும் வொர்க் அவுட் ஆகாது!” என்று பதில் அளித்தார்.
நல்ல ஸ்கிரிப்ட் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திடும்
தொடர்ந்து பேசியவர், “உதாரணமாக மாநகரம், மெட்ராஸ், தீரன், கைதி ஆகிய கதைகளை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தினர் ஆர்வமாக கேட்டார்கள். ஒரு நல்ல ஸ்கிரிப்ட் என தோன்றினால் கதையின் தன்மை மாறாமல் ஹீரோவுக்கான கதையாகவும் ஜனங்களுக்கும் பிடித்தமான கதையாக அவர்கள் மாற்றுவார்கள். இந்த புதிய படங்களின் போக்கு குறித்து கவனிக்கும் உச்ச நட்சத்திரங்கள் அந்த இயக்குநர்களுடன் இணைகின்றனர்.
சில பேருக்கு அது வொர்க் அவுட் ஆகும், சிலருக்கு வொர்க் அவுட் ஆகாது. எப்போதுமே உச்ச நட்சத்திரங்களை சாமானிய படைப்பாளிகள் நெருங்க முடியும். ஆனால் அதுக்கு ஒரு ப்ராசஸ் இருக்கு. அதை கண்டுபிடிக்கனும். பல சமயம் நம்முடைய காண்டாக்ட் உதவும். உங்களிடம் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் அது யாராக இருந்தாலும் கொண்டு சென்று, சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திடும். ” என்று கூறியுள்ளார்.
Also Read: "கதவ திறங்க.. என்னால ரிஸ்க் எடுக்க முடியாது.. Quit பண்றேன்".. வனிதா பரபரப்பு விலகல்?