துணிவு படத்தின் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் பாடல்கள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை மறைவுக்கு சியான் விக்ரமின் உருக்கமான பதிவு..!

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் செய்தியாளர்களை சந்தித்திருந்திருக்கிறார். அப்போது துணிவு படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும் என கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜிப்ரான்,"சாங் பக்கா மாஸா இருக்கும். அஜித் சாரோட ரசிகர்களுக்கு பிடிக்கும். ஒரு ரசிகரா நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறேனோ அந்த மாதிரி பண்ணிருக்கோம்" என்றார்.

துணிவு படத்தின் டிரெய்லர் எப்போது வெளிவரும்? என கேட்கப்பட்ட நிலையில், "அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும்" என்றார்.

Also Read | சிகிச்சைக்காக காத்திருக்கும் 100 குழந்தைகள்..உதவ முன்வந்த துல்கர் சல்மானின் குடும்பத்தினர்.!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Thunivu Music Director Ghibran give update about songs

People looking for online information on Ajith Kumar, Ghibran, Thunivu will find this news story useful.