"துணிவு.. ரொம்ப ஸ்பெஷலான படம்".. ட்வீட் செய்த ஜிப்ரான்! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | "கமல் சார் இத தான் சொல்லுவாரு".. வார இறுதியில் நடக்க போவதை முன்பே கணித்த Azeem.. சம்பவம் இருக்கு!

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் மலேசியா உரிமத்தை அங்குள்ள பிரபல முன்னணி நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா நாளை டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடைய நாளை சிறப்பாக்கியதற்கு  போனி கபூர், ஜி நிறுவனங்களுக்கு நன்றிகள் 🙏'துணிவு' என்னுடைய கூடுதல் சிறப்பு வாய்ந்த திரைப்படம். இது என்னுடைய 50வது படம் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 🙏 ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன், இதில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றிகள், அஜித் சார் & H. வினோத்" என ஜிப்ரான் ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்

 

Also Read | அந்த டான்ஸ் தான் அள்ளுது.. கச்சா பாதாம் பாட்டுக்கு நடனமாடிய வடிவேலு! செம்ம வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Thunivu is Extra Special Movie of Ghibran

People looking for online information on Ajith Kumar, Ghibran, Thunivu will find this news story useful.