"யுவன்.. நீங்க ராக்.." - யுவன் பிறந்த நாளில் அதிகம் பகிரப்படும் அஜித் எழுதிய THROWBACK குறிப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ajith thanked yuvan throwback note viral on yuvan birthday
Advertising
>
Advertising

பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்த யுவனின் இசைக்கு குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். அவருடைய இசை தங்களுக்கு மிகப்பெரிய ஹீலிங், தெராபி என்று குறிப்பிடும் ரசிகர்களும் உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் கலெக்‌ஷன்ஸ், ஆன் ரிப்பீட் மோடில் கேட்கும் தீவிர ரசிகர்கள் பலரும் உள்ளனர்.  

ajith thanked yuvan throwback letter viral on yuvan birthday

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் விளங்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இன்று (ஆகஸ்டு 31) பிறந்த தினம். இதனை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாட, இன்னொருபுறம் யுவன் ஷங்கர் ராஜா பிறக்கும்போது உண்டான அனுபவத்தை குறித்து இளையராஜா நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். இதேபோல் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் யுவனை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் பல வருடம் முன்பு நடிகர் அஜித்குமார், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு எழுதிய த்ரோபேக்  கையொப்ப குறிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நடிகர் அஜித் “யுவன், நீங்கள் ஒரு ராக் ஸ்டார்...  தீனா, பில்லா & இப்போது மங்காத்தா ஆகிய திரைப்படங்களுக்காக பெரிய நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.  மங்காத்தா திரைப்பட இசை வெளியீடு சமயத்தில் அஜித் யுவனுக்கு எழுதிய இந்த குறிப்பை ஒரு ரசிகராக யுவன் பெற்றுக்கொண்டார். தற்போது யுவனின் பிறந்த நாளில் இந்த குறிப்பு வைரலாகி வருகிறது.

அஜித்குமாரின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith thanked yuvan throwback note viral on yuvan birthday

People looking for online information on Ajith Kumar, Yuvan Shankar Raja will find this news story useful.