அஜித்தின் மக்கள் தொடர்பாளரான சுரேஷ் சந்திரா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அஜித்தின் பழைய ஸ்டேட்மெண்ட் ஒன்றை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
RIP William Hurt : நம்ம மார்வெல் உலகுக்கு பேரிழப்பு! மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்
நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக தனது சம்மந்தப்பட்ட செய்திகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தையும் தன்னுடைய மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவின் மூலமாகவே வெளியிட்டு வருகிறார்.பொதுவெளியில் அதிகம் பேசாதவராக அறியப்படும் அஜித் குமார் விரைவில் அரசியலுக்கு வருவார் வெளியான இணையதள செய்தியை மறுத்து சமீபத்தில் டிவிட் செய்திருந்தார் நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா.
அஜித்தும் ரசிகர்களும்
தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தமிழில் அமராவதி துவங்கி இதுவரையில் 60 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அஜித்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமா பயணத்தின் தொடக்க ஆண்டுகளில் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்தார் அஜித். அடிக்கடி ஊடகங்களையும் சந்தித்து பேட்டிக் கொடுத்து வந்தார். ஆனால் சமீபகாலமாக மிகவும் தனிமை விரும்பியாக இருக்கிறார்.
ரசிகர் மன்றங்களும் பட்டம் துறப்பும்
நடிகர் அஜித்துக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ரசிகர்மன்றங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் அவை அனைத்தையும் அவர் கலைப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அதுபோல அவருக்கு ரசிகர்கள் கொடுத்திருந்த அல்டிமேட் ஸ்டார் மற்றும் ‘தல’ ஆகிய பட்டங்களை சொல்லி அழைக்க வேண்டாம் எனவும் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் தன்னுடைய ரசிகர்கள் அவர்களின் குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்வதையே முதன்மையான பணியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
சுரேஷ் சந்திராவின் Reminder
இந்நிலையில் தற்போது திடீரென அஜித்தின் பழைய ஸ்டேட்மெண்ட் ஒன்றை அவரின் மேலாளரும் மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். அந்த ஸ்டேட்மெண்ட் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அஜித்தின் 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை தொடங்கியதை அடுத்து அஜித்தால் சுரேஷ் சந்திரா மூலமாக பகிரப்பட்டது. அதில் ‘திரு அஜித்குமாரின் திரையுலக 30 ஆண்டினை ஒட்டிய செய்தி ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகிய மூவரும் ஒரு நாணயத்தின் 3 பக்கங்கள். நான் ரசிகர்களிடம் இருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து சாய்வில்லாத பார்வையையும் பெற்றுக்கொள்கிறேன். வாழு வாழவிடு.. எப்போதும் எதிர்பார்ப்பில்லாத அன்பு’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இப்போது அந்த டிவீட்டைப் பகிர்ந்துள்ள சுரேஷ் சந்திரா ‘ஒரு நினைவூட்டல் .. இது தொடர்பானவர்களுக்கு … எப்போதும் எதிர்பார்ப்பில்லாத அன்பு’ எனக் கூறியுள்ளார். சுரேஷ் சந்திராவின் இந்த த்ரோபேக் டிவீட் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளையும் கமெண்ட்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
BOX OFFICE: ராதே ஷ்யாம் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் மட்டும் இம்புட்டு கோடியா? செம சம்பவம்