சென்னை : நடிகர் அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தன் ரசிகர்கள் நிற்கும் அஜித் பலரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அதே கூட்டணி மறுபடியும் ஒன்று சேர்ந்த படம் தான் வலிமை.
போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றது.
சென்சாரான விஜய் சேதுபதி நடித்த புதிய படம்! விரைவில் ரிலீஸ்.. முழு தகவல்
படக்குழு
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி,ராஜ் ஐயப்பா நடிக்கின்றனர். வில்லனாக கார்த்திகேயா நடிக்கின்றார்.ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
முதல் கட்டம்
வலிமை படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்தின் பிரமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் போஸ்டர் முதல் சிங்கள் பாடலிருந்து தனது பிரமோஷனை தொடங்கிய வலிமை படக்குழு, இதைதொடர்ந்து மோஷன் போஸ்டரையும் வெளியிட்டது. இது அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனைகளையும் படைத்த வந்தது.
வெளியீடு
மோஷன் போஸ்டரை தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல், அம்மா பாடல் அனைவரையும் கவர்ந்தது. அந்த இரண்டு பாடல்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. பைக் ரேசிங் செய்யும் அஜித் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அஜித் செய்யும் பைக் ரேசிங் மூலம் ரசிகர்கள் இப்படம் ரோட் சேப்டி ( Road Safety ) பற்றி இருக்குமோ என்று யோசித்து வருகின்றனர். இப்படத்தின் உரிமையை மதுரை அன்பு செழியன் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வைரல் புகைப்படம்
அடுத்த கட்டமாக படத்தின் டிரைலருக்காக காத்துகொண்டு இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அஜித்குமாரின் (HD ) எச்டி புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.
புது கெட்டப்
இதை தொடர்ந்து அஜித்தின் லேட்டஸ்ட் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றது. தாடியுடன் இருக்கும் அஜித், ரசிகருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அஜீத்தின் எளிமையை வலிமையாக காட்டுகிறது. புது கெட்டப் ஆக இருப்பதனால், இது அடுத்த படத்திற்கான லுக்காக இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவுகிறது.